பொன்னமராவதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஜனநாயக மாதர் சங்கத்தின் நிர்வாகிகள் கள ஆய்வு
பொன்னமராவதி:
பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொன்னமராவதி ஒன்றிய செயலாளர் மதியரசி தலைமையில் நிர்வாகிகள் மணிமேகலை, லதா, சுபா, ராஜாமணி, ராதா ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். வளையப்பட்டி அரசு மருத்துவமனை முன்பாக அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து நோயாளிகள், மூத்த குடிமக்கள் ஆகியோரின் சிரமங்களை போக்க வேண்டும்.
மேற்கண்ட மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், பணியாளர்கள், வாட்ச்மேன் நியமித்து பொதுமக்களுக்கு முழுமையான சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருக்கும் பொன்னமராவதி அமரகண்டான் ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டிடங்களை புதிதாக கட்டித்தர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.