உள்ளூர் செய்திகள்

ஆலங்குடி நூலகத்தில் மாணவர்கள் உறுப்பினர்களாக சேர்ப்பு

Published On 2023-01-22 12:28 IST   |   Update On 2023-01-22 12:28:00 IST
  • ஆலங்குடி நூலகத்தில் மாணவர்கள் உறுப்பினர்களாக சேர்ந்தனர்
  • ஆசிரியர் சசிகுமார் கலந்து கொண்டு கதைகள் கூறி மாணவர்களுக்கு மேலும் ஆர்வமூட்டினார்

ஆலங்குடி:

ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி- கலிபுல்லா நகர் கிளை நூலகத்தில் மாணவர்களுக்கு கதை சொல்லுதல் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மூலம் மாணவர்கள் மத்தியில் நூலத்தில் புத்தகம் படிக்கும் ஆர்வம் ஏற்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

ஆலங்குடி கலை இலக்கியப் பேரவையின் செயலாளர் கருணாகரன் ஆசிரியர் மாணவர்களை நூலகத்திற்கு அழைத்துச் சென்று, நூலகத்தில் புதிய உறுப்பினர்களாக இணைத்தும் மாணவர்கள் மத்தியில் நூலத்தில் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தினார். நிகழ்வில் ஆசிரியர் சசிகுமார் கலந்து கொண்டு கதைகள் கூறி மாணவர்களுக்கு மேலும் ஆர்வமூட்டினார். முடிவில் நூலகர் ரெங்கசாமி நன்றி கூறினார்.


Tags:    

Similar News