- புதுக்கோட்டை மௌண்ட்சீயோன் கல்லூரியில் 24 மணி நேர மின்னியல் - மின்னணுவியல் பயிற்சி பட்டறை நடைபெற்றது
- கற்றல் ேவகத்தை அதிகப்படுத்துவதற்காக இப்பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது
புதுக்கோட்டை, ஜூலை 4-
மௌண்ட்சீயோன் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பில் 24 மணி நேர பயிற்சி பட்டறை நடைபெற்றது.மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு காலை 9.00மணி முதல் மறுநாள் காலை9.00மணி வரை தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த 24 மணி நேரபயிற்சி பட்டறையில் மாணவர்களுக்கு சர்க்யூட் விசாட்மென்பொருள் மூலம் மின்னியல் மற்றும் மின்னணுவியல் சர்க்யூட்களை இணைப்பது மற்றும் உருவகப்படுத்துதல் தொடர்பாக பயிற்சியளிக்கப்பட்டது.முன்னதாக நடைபெற்ற பயிற்சி பட்டறை துவக்க நிகழ்வில் கல்லூரிடீன்ராபின்சன் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர்பாலமுருகன் தலைமை வகித்து பயிற்சிப் பட்டறையினை துவக்கி வைத்தார்.மாணவர்களுக்கு ஒருமுகப்படுத்தப்பட்ட மற்றும் அதிவேகமான கற்றல் அனுபவத்தை வழங்குவதே இத்தகைய 24 மணி நேர பயிற்சி பட்டறையின் சிறப்பம்சம் ஆகும்.சர்க்யூட்விசா ட்மென்பொருள் மூலம் மின்னியல் மற்றும் மின்னனணுவியல் சர்க்யூட்களை இணைப்பது போன்ற செயல்களை தொடர்ச்சியாக 24-மணி நேரம் செய்து பார்ப்பது போன்ற இப்பயிற்சியானது மாணவர்களுக்கு அவர்களது எதிர்காலத்தில் தொழிற்சாலைகளிலும் ,ஆராய்ச்சிக் கூடங்களிலும் தொடர்ந்து பணிபுரிய உதவியாக அமையும்.இப்பயிற்சி பட்டறையினை உதவிபேராசிரியர்கள் முத்துக்குமார் மற்றும்டென்சில்இன்பன்ட் ஆகியோர் இணைந்து பயிற்றுவித்தனர்.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மின்னியல் மற்றும் மின்னனணுவியல் துறைத்தலைவர்திவ்யபிரசாத் மேற்கொண்டார். இறுதியாக உதவிபேராசிரியை அமலிரோஸ்லின் பயிற்சிப்பட்டறையில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.