உள்ளூர் செய்திகள்
வீடு புகுந்து முதியவரை தாக்கி நகை, பணம் கொள்ளை
- வீட்டிற்குள் நுைழந்த மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டு ஓட்டம்
- தாக்குதலுக்கு உள்ளான முதியவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை
ஆலங்குடி
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே திருவரங்குளம் தெற்கு ரத வீதியில் வசித்து வருபவர் சண்முகம் (வயது 85). இவர் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை நோட்ட மிட்ட மர்ம நபர்கள், வீட்டிற்குள் புகுந்தனர். இதனை பார்த்த சண்முகம் யார் நீங்கள், எதற்காக வீட்டிற்குள் வந்துள்ளீர்கள் என கேட்டுள்ளார். பதில் ஏதும் கூறத மர்மநபர்கள், சண்முகத்தை தாக்கிவிட்டு அவர் அணிந்திருந்த மோதிரங்கள் மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு தப்பி ஒடிவிட்டனர். இதில் காயமடைந்த சண்முகம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி காவல் ஆய்வாளர் அழகம்மை மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.