உள்ளூர் செய்திகள்
தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல்
- கறம்பக்குடியில் நடைபெற்றது
- வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் திறந்து வைத்தார்
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி நகர தி.மு.க. சார்பில் சீனி கடை முக்கத்தில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர தி.மு.க. செயலாளரும் பேரூராட்சி தலைவருமான உ. முருகேசன் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் வி முத்துகிருஷ்ணன், நகர இளைஞரணி அமைப்பாளர் ராசி, பரூக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் கலந்து கொண்டு கோடைகால நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மற்றும் மோர், பழங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் நகர அவைத் தலைவர் அப்துல் லத்தீப், மாவட்ட பிரதிநிதிகள் அப்துல் அஜீஸ், செல்வராஜ், பேரூராட்சி கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் நகரக் கழக நிர்வாகிகள் கழக முன்னோடிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.