உள்ளூர் செய்திகள்

அறந்தாங்கியில் தி.மு.க. தெருமுனை பிரச்சார கூட்டம்

Published On 2023-06-11 12:47 IST   |   Update On 2023-06-11 12:47:00 IST
  • அறந்தாங்கியில் தி.மு.க. தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது
  • தலைமை கழக பேச்சாளர் பொள்ளாச்சி சித்திக் கலந்து கொண்டு தி.மு.க. அரசின் ஈராண்டு சாதனைகள் குறித்து விளக்கிப் பேசினார்.

அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தி.மு.க. அரசின் ஈராண்டு சாதனைகள் குறித்து தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய இளைஞர் அணி சார்பில் நடைபெற்றக் கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். அழியாநிலை, பரவாக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் பொள்ளாச்சி சித்திக் கலந்து கொண்டு தி.மு.க. அரசின் ஈராண்டு சாதனைகள் குறித்து விளக்கிப் பேசினார்.

நிகழ்ச்சியில் மாநில விவசாய தொழிலாளர் அணி துணைத்தலைவர் சந்திரசேகர், கிழக்கு ஒன்றியச் செயலாளர் குமார், கூட்டமைப்பு தலைவர் மணிமொழியன், மாவட்டக்குழு உறுப்பினர் சரிதாமேகராஜன், ஒன்றிய அவைத்தலைவர் கருணாநிதி, ஒன்றியத் துணைச் செயலாளர்கள் மூர்த்தி, பாலு, ஊராட்சி மன்ற தலைவர்கள் அடக்கியப்பன், தமிழரசி அன்பழகன், ஆன்டியப்பன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் குணவிநாயகம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் தமிழ்ராசு, ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் செந்தில், சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News