உள்ளூர் செய்திகள்
மாவட்ட அளவிலான பளு தூக்கும் போட்டி
- மாவட்ட அளவிலான பளு தூக்கும் போட்டி நடைபெற்றது.
- 70 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அரிமளம் ஒன்றியம் தேக்காட்டூர் ஊராட்சி சிவபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் புதுக்கோட்டை மாவட்ட அமைச்சூர் பளு தூக்கும் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான பளு தூக்கும் போட்டி நடைபெற்றது. சீனியர் ஆண்கள், பெண்கள், ஜூனியர் ஆண்கள் போன்ற பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் 70 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்ட அளவில் நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு உடற்பயிற்சி கூடத்திலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் முதல் 3 இடங்களை பெற்றவர்களுக்கு 2023 ஆண்டிற்கான மாவட்ட சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது.