உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-23 12:32 IST   |   Update On 2023-07-23 12:32:00 IST
  • மணிப்பூர் பாலியல் கொடுமையை கண்டித்து புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
  • அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் கலந்து கொண்டனர்

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் அனைத்திந்தியஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய அமைப்புகளில் சார்பில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.பாண்டிச்செல்வி தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன்,  நகரச் செயலாளர் ஆர். சோலையப்பன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி.ஜீவானந்தம். தலைவர் டி.சலோமி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி. சுசிலா, வாலிபர் சங்க நகரச் செயலாளர் கு. ஜெகன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன், தலைவர் அ.சந்தோஷ்குமார் , தமுஎகச மாவட்டச் செயலாளர் ஸ்டாலின் சரவணன், மாற்றுத்திறனாளிகள் சங்க நகரச் செயலாளர் ரமேஷ், உள்ளிட்டோர் கண்ட உரையாற்றினார்.

Tags:    

Similar News