உள்ளூர் செய்திகள்

கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு கூட்டம்

Published On 2022-07-21 14:16 IST   |   Update On 2022-07-21 14:16:00 IST
  • கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது
  • விவசாயிகளுக்கு விவசாய காப்பீடு வழங்கவேண்டும்

புதுக்கோட்டை:

பொன்னமராவதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் குமார் தலைமைவகித்தார். மாவட்ட செயலர் செங்கோடன், மாநிலக்குழு உறுப்பினர் ஏனாதி ராசு ஆகியோர் பங்கேற்று மாவட்டக்குழுவின் முடிவினை விளக்கிப்பேசினர். கூட்டத்தில் ஒன்றிய அரசின் பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் 2021-2022 ஆகிய வருடங்களில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு விவசாய காப்பீடு வழங்கவேண்டும். காரையூர் காவல்நிலையத்தை பொன்னமராவதி காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தின் கீழ் செயல்பட தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆகஸ்ட்-7,8,9 தேதிகளில் திருப்பூரில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-வது மாநில மாநாட்டில் பொன்னம ராவதியிலிருந்து திரளாக பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செல்வம், வெள்ளக்கண்ணு, வெள்ளச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒன்றிய துணை செயலர் கருணாமூர்த்தி நன்றி கூறினார்

Tags:    

Similar News