உள்ளூர் செய்திகள்

கார் மோதி முதியவர் பலி

Published On 2023-09-07 14:50 IST   |   Update On 2023-09-07 14:50:00 IST
  • கார் மோதி முதியவர் பலியானார்
  • சாலையை கடக்க முயன்ற போது சம்பவம்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை ஆதனக்கோட்டை அருகே கருப்புடையான்பட்டியை சேர்ந்தவர் வீரப்பன் (வயது 63). இவர், ஆதனக்கோட்டையில் உள்ள குப்பையன்பட்டி விளக்குசாலையில் உள்ள ஓட்டலில் சாப்பாடு வாங்கிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது சாலையை கடக்க முயன்ற போது, மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா தோப்புவளைவு தெருவை சேர்ந்த தவமணி என்பவர் ஓட்டிவந்த கார், எதிர்பாராதவிதமாக இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வீரப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆதனக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருணகிரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News