உள்ளூர் செய்திகள்

மாட்டு வண்டி எல்கை பந்தயம்

Published On 2023-07-05 12:40 IST   |   Update On 2023-07-05 12:40:00 IST
  • மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
  • இதில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை :

திருவரங்குளம் அருகே பூவரசகுடி செந்தலை அய்யனார் கருப்பர் கோவில் சந்தன காப்பு திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் பூஞ்சிட்டு, பெரிய மாடு, ஒத்த மாடு என போட்டிகள் நடைபெற்றது. பந்தயத்தில் அறந்தாங்கி, அரிமளம், ஆவுடையார்கோவில், பேராவூரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News