உள்ளூர் செய்திகள்

விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-19 12:31 IST   |   Update On 2023-07-19 12:31:00 IST
புதிய வறுமை கோடு பட்டியல் வெளியிடக் கோரி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பொன்னமராவதி

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் ஒலியமங்கலம், மறவாமதுரை, கொன்னையம்ப்பட்டி, காரையூர்,மேலத்தானியம் ஊராட்சிகளில் வசதி படைத்தவர்களை இணைத்தும் உண்மையான பயனாளிகளை புறக்கணித்தும் வெளியிடப்பட்டுள்ள வறுமைக்கோட்டு பட்டியலை ரத்து செய்து,உரிய முறையில் விசாரணை நடத்தி தகுதி உள்ள பயனாளிகளை பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம்.தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இணைந்துபொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு கொடுத்து,காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது விதொச ஒன்றிய செயலாளர் பி. ராமசாமி தலைமை தாங்கினார். நடைபெற்றது. விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார்.மாநில செயலாளர் எஸ்.சங்கர். உள்ளிட்ட 300க்கும் மேற்ப ட்டோர் பங்கேற்றனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனுக்களை அளித்தனர்.

Tags:    

Similar News