பொன்னமராவதியில் ஆதார் நிரந்தர பதிவு மையம்
- பொன்னமராவதியில் ஆதார் நிரந்தர பதிவு மையம் தொடங்கப்பட்டது
- காரையூரில் ஒரு நிரந்தர ஆதார் பதிவு மையம் தொடங்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொன்னமராவதி:
பொன்னமராவதி ஒன்றியத்தில் தாலுகா அலுவலகத்தில் மட்டுமே ஆதார் பதிவு மையம் செயல்பட்டு வருகின்றது. இந்த சேவையை ஒன்றிய அலுவலகம் மற்றும் காரையூர் பகுதியில் அமைக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆதார் நிரந்தர பதிவு மையம் அமைக்கப்பட்டு இதன் தொடக்க விழா நடந்தது.
ஒன்றியக்குழுத்தலைவர் சுதாஅடைக்கலமணி ஆதார் பதிவு மையத்தை தொடங்கிவைத்தார். இதில் ஒன்றிய ஆணையர்கள் தங்கராசு, குமரன், ஊராட்சித்தலைவர்கள் கீதாசோலையப்பன், கிரிதரன், அழகுமுத்து, மீனாள்அயோத்திராஜா, லெட்சுமி, துணைஆணையர்கள் குமார், கற்புக்கரசி, வள்ளி, ஒன்றிய அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சிப்பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதில் புதிதாக ஆதார் எடுத்தல் திருத்தம், மொபல் எண் மாற்றம், புகைப்படம் மாற்றம் உள்ளிட்ட ஆதாரின் அனைத்துப்பணிகளும் இந்த மையத்தில் மேற்கொள்ளப்படும். இதே போல காரையூரில் ஒரு நிரந்தர ஆதார் பதிவு மையம் தொடங்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.