உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டை எம்.எல்.ஏ., பெயரில் போலி கணக்கு தொடங்கி கடன் கேட்ட மர்ம நபர்

Published On 2023-09-02 12:34 IST   |   Update On 2023-09-02 12:34:00 IST
  • புதுக்கோட்டை தி.மு.க. எம்.எல்.ஏ., பெயரில் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கி 8 ஆயிரம் ரூபாய் கடன் கேட்ட மர்ம நபர்
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. முத்துராஜா. இவரது பெயரில் மர்ம நபர் ஒருவர் போலியாக இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கினார். பின்னர் அவசர தேவைக்காக ரூ. 8000 பணம் உடனடியாக தேவைப்படுவதால் அனுப்பி வைக்கும்படி பதிவிட்டு இருந்தார்.இதைப் பார்த்து எம்.எல்.ஏ.வின் நண்பர் ஒருவர் அவரை தொடர்பு கொண்டு கேட்டார்.உடனே சுதாகரித்து கொண்ட எம்.எல்.ஏ. முத்துராஜா தனது சமூக வலைதள கணக்குகளை சரி பார்த்தார். அப்போது வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் இன்ஸ்டாகிராமில் தனது பெயரில் போலிக் கணக்கு தொடங்கி பணம் வசூலிக்க முயன்றது தெரியவந்தது. இதை யடுத்து உடனடியாக புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News