உள்ளூர் செய்திகள்
ஆலங்குடி புனித அதிசய அன்னை ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
- புனித அதிசய அன்னை ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
- திருப்பலிக்கு பின்னர் அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது
ஆலங்குடி:
ஆலங்குடி புனித அதிசய அன்னை ஆலயத்தில் நள்ளிரவு புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பங்குத்தந்தை ஆர்.கே., உதவி பங்குத்தந்தை கித்தேரிமுத்து ஆகியோர் கூட்டு திருப்பலியை நிறைவேற்றினர். இந்த திருப்பலியில் கும்மங்குளம், செம்பட்டி விடுதி, அய்யங்காடு, குளவாய்ப்பட்டி, பாத்தம்பட்டி, வாழைக்கொல்லை, நெம்மக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு தினம் பிறப்பதை அறிவிக்கும் விதமாக உன்னதங்களிலே இறைவனுக்கு என்ற பாடல் பாடப்பட்டது. அப்போது வாணவேடிக்கை நடைபெற்றது. திருப்பலிக்கு பின்னர் அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது. இதனை ெதாடர்ந்து அனைவரும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.