உள்ளூர் செய்திகள்

விவசாயி எடுத்து வந்த ரூ.6.5 லட்சம் திருட்டு

Published On 2022-12-11 11:53 IST   |   Update On 2022-12-11 11:53:00 IST
  • விவசாயி எடுத்து வந்த ரூ.6.5 லட்சம் திருட்டுபோனது
  • 2 பேர் திருடிக்கொண்டு தலைமறைவாகிவிட்டனர்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள தாயினிப்பட்டியை சேர்ந்தவர் முருகன். விவசாயியான இவர், வீடு கட்டுவதற்காக வங்கியில் இருந்து கடன் பெற்றுள்ளார். கீரனூரில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் உள்ள இவரது கணக்கில் இருந்து கடன் தொகை ரூ.6.5 லட்சத்தை எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டுள்ளார். குளத்தூரில் ஒரு கடை முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு, கடையில் சில பொருட்களை வாங்கிக்கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் இருந்த தொகையை இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த 2 பேர் திருடிக்கொண்டு தலைமறைவாகிவிட்டனர். இச்சம்பவம் தொடர்பாக வந்த புகாரின் பேரில் கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News