உள்ளூர் செய்திகள்

6 கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

Published On 2023-11-02 07:58 GMT   |   Update On 2023-11-02 07:58 GMT
  • ஊராட்சியை ஒரே மாவட்டத்தில் இணைக்க கோரி 6 கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்து உள்ளனர்
  • பொன்னமராவதி அருகே கிராமசபை கூட்டத்தில் மக்கள் ஆவேசம்

பொன்னமராவதி,

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் ஆர்.பாலக்குறிச்சி ஊராட்சிக்குப்பட்ட ரெகுநாதபட்டி கிராமத்தில் ஊராட்சி துணை தலைவர் ரெசினா பேகம் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் யூனியன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பூமிநாதன் பங்கேற்றார்.

கூட்டத்தில் ரெகுநாதம்பட்டி, சீகம்பட்டி, வைரம்பட்டி, கோபால்பட்டி விடத்தலாம்பட்டி உள்ளிட்ட 6 கிராம மக்கள் கலந்து கொண்டனர். தற்பொழுது வரை வருவாய் கிராமமாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சியிலும் ,பாராளுமன்றம்,சட்டமன்ற தொகுதி சிவகங்கை மாவட்டத்திலும்,உள்ளாட்சி பிரதிநிதிகள் புதுக்கோட்டை மாவட்டத்திலும் இருப்பதால் 6 ஊர் கிராம மக்களும் ஏதோ ஒரு மாவட்டத்தில் தங்களது ஊராட்சியை முழுமையாக இணைக்க கோரி கிராம சபை கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

காவல் நிலையம், மின் வாரியம் சிவகங்கை மாவட்டத்திலும் இருப்பதால் சாலை வசதி, சாலைப்போக்குவரத்து பேருந்து வசதி, குடிநீர் வசதி போன்ற பல்வேறு அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்ய முடியவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்திலோ அல்லது சிவகங்கை மாவட்டத்திலோ ஏதோ ஒரு மாவட்டத்தில் அரசு விரைவில் இணைக்க வேண்டும். என கோரிக்கை வைத்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதனை அதனை ஊராட்சி செயலாளர் சரவணன் வாசித்தார். இதில் நெடுஞ்சாலைதுறை உதவி பொறியாளர் பாலாஜி, பள்ளி தலைமைஆசிரியர் நாகலட்சுமி, ரேசன் கடை விற்பனையாளர்கள் முருகேசன், ரவிச்சந்திரன், நர்ஸ் கலைச்செல்வி, வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை உலகம்பட்டி சப் இன்ஸ்பெக்டர்( பொறுப்பு) சுப்பிரமணியன் மற்றும் போலீசார் இருந்தனர்.

Tags:    

Similar News