ஆலங்குடி
கீரமங்கலம் காவல் நிலையத்தின் முன்பாக 4 பெண்கள் தற்கொலை முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கட்டுமாவடிப் பகுதியைச் சேர்ந்த கார்த்திகா (வயது 25) என்பவருக்கு, நரியங்காடு பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவருடன் கடந்த 2014 ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஏழு வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் இருவரும் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பனங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன்(வயது 25) என்ற ஆன்லைன் பார்சல் டெலிவரி செய்பவருடன் கார்த்திகாவிற்கு கள்ள த்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக, பரமேஸ்வரன் மற்றும் கார்த்திகா சென்னையில் வசித்து வந்துள்ளனர்.
கார்த்திகாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆன விவகாரம் தெரிய வந்த சூழலில் பரமேஸ்வரனின் குடும்பத்தினர் பரமே ஸ்வரனை கார்த்திகாவிடம் இருந்து பிரிந்து விட்டதாகத் கூறப்படுகிறது.இது தொடர்பாக கார்த்திகா கீரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தி ருந்தார். இது தொடர்பாக பரமேஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்த போலீசார் கார்த்திகா தரப்பினரோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.இந்த பேச்சுவார்த்தை யின் போது பரமேஸ்வரன் கார்த்திகாவோடு செல்வ தாக போலீசாரிடம் கூறிய தை கேட்ட பரமேஸ்வரனின் தாய் மற்றும் அவரது மூன்று சகோதரிகள், காவல் நிலையத்தின் வெளியே நிறுத்தி வைத்திருந்த தங்களது இரு சக்கர வாகனத்தில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தனர்.அப்போது அங்கிருந்த போலீசார் உடனடியாக அந்த பூச்சி மருந்து பாட்டிலை தட்டி விட்டதோடு அவர்களை உடனடியாக மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இதை தடுக்கச் சென்ற கீரமங்கலம் காவல் நிலையப் பெண் காவலர் வினிதா என்ப வரின் கண்ணிலும் பூச்சி மருந்து ஊற்றிய தில் அவரும் சிகிச்சைக்காக மருத்து வமனை சென்றுள்ளார்.இந்த சம்பவத்தின் காரணமாக பட்டு க்கோட்டை அறந்தாங்கி நெடுஞ்சாலையில் உள்ள கீரமங்கலம் காவல் நிலையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.