இலங்கையில் இருந்து தப்பி வந்த 3 பேர் கைது
- கோடிக்கரை கடற்கரையில் ஒதுங்கிய பைபர் படகு குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் சிக்கினர்
- இரண்டு பேர் தமிழகத்திற்குள் ஊடுருவியதால் துருவிதுருவி விசாரணை
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மணமே ல்குடி கோடியக்கரை கடலோர பகுதியில் கடந்த 4ம் தேதி மர்மமான முறையில் இலங்கையை சேர்ந்த ஃபைபர் படகு ஒன்று கரை ஒதுங்கிய நிலையில் நங்கூரமிடப்பட்டிருந்தது. இதனை அறிந்த வனத்துறை அதிகாரிகள்,கடலோர பாதுகாப்பு குழுமத்தினர், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று படகை ஆய்வு செய்தனர்.ஆய்வில் இலங்கையை சேர்ந்த 40 குதிரைதிறன் கொண்ட அதிவிரைவு பைபர் படகு என்பதும், அதில் டீசல் கேன்கள், 2 சட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து படகை கைப்பற்றிய கடலோர பாதுகாப்பு குழுமத்தினர், படகிலிருந்து எஞ்சினை தனியாக பிரித்து யாரும் இயக்காதவாறு செய்தனர்.மேலும் அந்தப் படகில் யாரேனும் இலங்கையில் இருந்து தப்பித்து வந்துள்ளார்களா, வேறு ஏதேனும் மர்ம பொருட்கள் கடத்தி வரப்பட்டதா, அல்லது பழுதாகி காற்றில் இழுத்து வரப்பட்டதா என்ற பல்வேறு கோணத்தில் விசாரணையை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் திருவள்ளுவர் மாவட்டம் கும்மிடிபூண்டி இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் 2 பேர் ஒழிந்திருப்பதாக க்யூ ப்ரான்ச் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் அங்கு சென்ற போலீசார் மறைந்திருந்த 2 நபர்களை பிடித்து விசாரித்ததில் அதே முகாமை சேர்ந்த சிந்துஜன் (28) என்பவர் இலங்கைக்கு சென்று லிங்கேஸ்வரன்(25), தூசன் (21)ஆகிய இருவரை கள்ளத்தனமாக படகில் கூட்டி வந்திருப்பது தெரியவந்துள்ளது. 3 பேரையும் கைது செய்த போலீசார், படகு உள்ள மணமேல்குடி கோடியக்கரை பகுதிக்கு நேரில் அழைத்துச் சென்று, பின்பு கடலோர பாதுகாப்பு குழும அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்க்கொண்டு வருகி ன்றனர். இலங்கையிலிருந்து 2 பேர் கள்ளத்தனமாக தமிழகத்திற்குள்ஊடுரு வியுள்ள சம்பவம் அப்பகு தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.