உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டையில் மேலும் 3 பேருக்கு டெங்கு

Published On 2023-10-12 06:55 GMT   |   Update On 2023-10-12 06:55 GMT
  • புதுக்கோட்டையில் மேலும் 3 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது
  • காய்ச்சல் பாதிக்கப்பட்ட 137 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அரசு சார்பில் சுகாதார முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் காய்ச்சல் பாதிப்பு கணிசமாக உயர்ந்த வண்ணம் உள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சலுக்கு என்று தனியாக வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு தேவையான மருந்துகள் இருப்பில் வைக்கப்பட்டு உள்ளது. தினசரி பாதிப்பு சராசரியாக பதிவாகி வருகிறது.புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சலுக்காக ஏற்கனவே உள்ள வார்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரப்படுகிறது. மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதற்காக போதிய அளவு மருந்து, மாத்திரைகள் இருப்பில் உள்ளதாகவும் மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர், பூவரசக்குடியை சேர்ந்த 26 வயது பெண், கருவிடைசேரியை சேர்ந்த 24 வயது பெண் ஆகிய 3 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் காய்ச்சல் காரணமாக 137 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனை தொடர்ந்து புதுக்கோட்டையில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அனைத்து நடவடிக்கையும் தீவிரமாக எடுத்து வருகிறது. குறிப்பாக பொதுமக்களுக்கு மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.இதுபற்றி டாக்டர்கள் கூறுகையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரைக் குணப்படுத்த மருத்துவமனையில் போதுமான வசதிகளுடன் கூடிய சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர் காய்ச்சலுக்காக வருவோரை உடனடியாகப் பரிசோதனை செய்யவும், உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தால் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றனர்.

Tags:    

Similar News