உள்ளூர் செய்திகள்
விடுதி காப்பாளர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்
மாணவர் போராட்டம் எதிரொலி....
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் மன்னர் கல்லூரி அருகே ஆதிதிராவிடர் நலத்துறை கல்லூரி மாணவர்கள் விடுதி உள்ளது. இந்த விடுதியில் மாணவர்களுக்கு வினியோகிக்கப்படும் உணவு தரமில்லை எனவும், அடிப்படை வசதிகள் இல்லை எனவும் கூறி விடுதியில் தங்கி படிக்கும் மன்னர் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் நேற்று முன்தினம் சாப்பாடு தட்டுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் சமரசமடைந்தனர். இந்த நிலையில் விடுதி காப்பாளர்கள் கோபால்சாமி, சோனைமுத்து மற்றும் சமையலர் சக்திவேல் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி 3 பேரும் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.