அறந்தாங்கி பகுதிகளில் போலி மருத்துவர்கள் 3 பேர் கைது
- அறந்தாங்கி பகுதிகளில் போலி மருத்துவர்கள் 3 பேர் கைது செய்யபட்டனர்
- அவர்களிடமிருந்து 30 ஆயிரம் ரொக்கப்பணம், ஸ்டெதஸ்கோப் , டிஜிட்டல் தெர்மாமீட்டர், மருந்து மாத்திரைகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடி பகுதியை சேர்ந்தவர் மதியழகன் (வயது55), 12ம் வகுப்பு வரை படித்த இவர் நாகுடி கடைவீதியில் ஸ்ரீமதி என்ற ஆங்கில மருந்தகத்தை நடத்தி வந்துள்ளார். மேலும் மருந்தகத்திற்கு வருபவர்களுக்கு மருத்துவம் பார்த்து அவர்களுக்கு மருந்து மாத்திரைகள்,ஊசி செலுத்தி, மருத்துவர் போல் செயல்பட்டு வந்துள்ளார்.தகவலறிந்த நாகுடி பகுதி கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில், நாகுடி காவல்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலி மருத்துவரை கைது செய்தனர்.
மேலும் அவரிடமிருந்து ரூ.31 ஆயிரம் ரொக்கப்பணம், ஸ்டெதஸ்கோப், பல்ஸ் மீட்டர், தையல் நரம்பு (நூல்) உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.அதே போன்று ஆவுடையா ர்கோவில் தாலுகா கரூர் பகுதியில் போலி மருத்து வர்களாக செயல்பட்டு வந்த தர்மலிங்கம் (54), கருப்பையா (47) ஆகியோரை கரூர் காவல்த்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 30 ஆயிரம் ரொக்கப்பணம், ஸ்டெதஸ்கோப் , டிஜிட்டல் தெர்மாமீட்டர், மருந்து மாத்திரைகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனர். அறந்தாங்கி பகுதிகளில் போலி மருத்துவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.