- போலீசாரின் ரகசிய கண்காணிப்பில் சிக்கினர்
- 2 செல்போன்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது
ஆலங்குடி.
ஆலங்குடி அருகே உள்ள செம்பட்டி விடுதி கடை தெருவில் லாட்டரி சீட்டுக்கள் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் செம்பட்டி விடுதி போலீசார் அப்பகுதியில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது செம்பட்டிவிடுதி நால்ரோடு தனி யார் ஹோட்டல் அருகில், லாட்டரி விற்று கொண்டிருந்த முக்கம்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த கலியபெருமாள் மகன் முருகானந்தம் (வயது 45) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன், லாட்டரி சீட்டுகள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றைபோலீசார் பறிமுதல் செய்தனர்.பின்னர் செம்பட்டிவிடுதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சமுத்திரராஜன் வழக்கு பதிவு செய்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்ற வியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜய்பாரதி முன்பு ஆஜர்ப்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தார்.இதே போல கூழையன்காடு பஸ் நிறுத்தம் அருகில் லாட்டரி விற்றுக்கொண்டிருந்த, கூழையன்காடு கருப்பையா மகன் சேகர் ( வயது 40 ) ஆலங்குடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 2 செல்போன்கள், லாட்டரி சீட்டுகள், ரூ.9 ஆயிரத்து 150 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்த ஆலங்குடி சப் இன்ஸ்பெக்டர் நதியா அவர் மீது வழக்கு பதிந்து மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜய பாரதி முன்பு ஆஜர்ப்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தார்.