உள்ளூர் செய்திகள்
கறம்பக்குடியில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
- கறம்பக்குடியில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யபட்டனர்
- அவர்களிடமிருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணம் ரூ.5 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்
கறம்பக்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்கப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தொடர்ந்து புகார் வந்த நிலையில் இருந்தன. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரையின்பேரில் சிறப்பு காவல் படையினர் கறம்பக்குடி பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் கறம்பக்குடி அருகே உள்ள சூரக்காடு என்ற கிராமத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற சுப்ரமணியன் (வயது 50), சதானந்தன் (48) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணம் ரூ.5 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கறம்பக்குடி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.