உள்ளூர் செய்திகள்

2 டன் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

Published On 2023-04-15 12:47 IST   |   Update On 2023-04-15 12:47:00 IST
  • போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்
  • 2 டன் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை அரிமளம் ஒன்றியம் கல்லூர் சுகந்திரபுரம் பகுதியில் புதுக்கோட்டை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்ேபாது அந்த வழியாக சென்ற காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில் 2 டன் ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து கே.தெக்கூர் பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 37), கே.ராயவரம் பகுதியை சேர்ந்த அரவிந்தன் (25) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News