உள்ளூர் செய்திகள்

தொலைந்து போன 105 செல்போன்கள் மீட்பு

Published On 2023-05-06 12:52 IST   |   Update On 2023-05-06 12:52:00 IST
  • ரூ.21.5 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்கப்பட்டு
  • மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே உரியவர்களிடம் ஒப்படைத்தார்

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருட்டு மற்றும் தொலைந்து போன செல்போன்கள் தொடா்பாக போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த செல்போன்களை மீட்க புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்கிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, சைபர் கிரைம் போலீசார் மூலம் 105 செல்போன்களை மீட்டனர். இதன் மதிப்பு ரூ.21½ லட்சம் ஆகும். மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே நேற்று ஒப்படைத்தார். மேலும் செல்போன்களை மீட்ட போலீசாரை பாராட்டி, வெகுமதியும் வழங்கினார்.

Tags:    

Similar News