உள்ளூர் செய்திகள்

கறம்பக்குடி அருகே பஸ் கவிழ்ந்து 10 பேர் படுகாயம்

Published On 2022-07-03 14:02 IST   |   Update On 2022-07-03 14:02:00 IST
  • பஸ் ஒன்று கறம்பக்குடி பெரியாற்றுப் பாலம் அருகே சென்று கொண்டிருந்தது.
  • இதனால் நிலை தடுமாறிய பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பின் மீது மோதி சாலையோற பள்ளத்தில் கவிழ்ந்தது.

புதுக்கோட்டை:

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து கறம்பக்குடி வழியாக புதுக்கோட்டை வரை செல்லும் தனியார் பஸ் ஒன்று கறம்பக்குடி பெரியாற்றுப் பாலம் அருகே சென்று கொண்டிருந்தது.

அப்போது அதே சாலையில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் ஒன்று வந்ததுள்ளது. மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க பஸ் டிரைவர் திடீர் பிரேக் போட்டதாக கூறப்படுகிறது.

இதனால் நிலை தடுமாறிய பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பின் மீது மோதி சாலையோற பள்ளத்தில் கவிழ்ந்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்த 10க்கும் மேற்பட்டோரை மீட்டு சிகிச்சைக்காக கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கறம்பக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News