உள்ளூர் செய்திகள்

புதுச்சேரி முதல்- மந்திரி ரங்கசாமி அர்ச்சனை செய்து வழிபட்டார்.

கும்பகோணம் பகுதி கோவில்களில் புதுச்சேரி முதல்- மந்திரி தரிசனம்

Published On 2023-10-14 09:33 GMT   |   Update On 2023-10-14 09:33 GMT
  • தட்டுகளில் உளுந்தை நிரப்பி 9 நல்லெண்ணெய் விளக்குகள் ஏற்றி வழிபட்டார்.
  • கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது.

சுவாமிமலை:

கும்பகோணம் அடுத்த திருநா கேஸ்வரம் நாகநா தசாமி கோவிலுக்கு புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி தரிசனம் செய்வதற்காக வந்தார்.

அவருக்கு கோவில் அறநிலையத்துறை சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கோவிலில் தனி சன்னதியில் அருள்பா லித்து வரும் நாககன்னி, நாகவல்லி சமேத ராகுப கவானுக்கு மஞ்சள், சந்தனம், பால் அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் அவர் கலந்து கொண்டு ராகு பகவானை தரிசித்தார்.

ராகு தோஷம் நீங்க தட்டுகளில் உளுந்தை நிரப்பி 9 நல்லெண்ணெய் விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்தார்.

தொடர்ந்து, அம்பாள் சன்னதிக்கு சென்று வழிபாட்டார்.

பின்னா, திருபுவனத்தில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான தர்மசம்வர்த்தினி சமேத கம்பகரேஸ்வரர் கோவிலுக்கு சென்று கம்பகரேஸ்வரர், அம்பாள் மற்றும் சரபேஸ்வரர் சன்னதிகளில் சென்று அர்ச்சனை செய்து வழிபட்டார்.

முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News