உள்ளூர் செய்திகள்

காமராஜர் பிறந்தநாளையொட்டி மாணவர்களுக்கு பேச்சு போட்டி

Published On 2022-07-19 15:03 IST   |   Update On 2022-07-19 15:03:00 IST
  • புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை விவேகா மெட்ரிக் பள்ளியில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடைபெற்றது
  • பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் விஜயபாஸ்கர் பரிசுகளை வழங்கினார்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியங்கள் வரைதல் உள்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

விழாவில் முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

விழாவில் பள்ளியின் தாளாளர் வெல்கம் என்.மோகன், மாவட்ட ஆவின் சேர்மன் பழனியாண்டி, விராலிமலை மேற்கு மாவட்ட கவுன்சிலர் ஆர்.கே.சிவசாமி, விராலிமலை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தீபன் சக்கரவர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன் உட்பட பல்வேறு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

விழாவில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக பள்ளி நிர்வாக இயக்குனர் அருண் பிரசாத் மோகன் வரவேற்றார். விவேகா மெட்ரிக் பள்ளி தாளாளர் வெல்கம் மோகன் நன்றி கூறினார்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இலுப்பூர் கல்வி மாவட்டத்திலேயே முதல் இடம் பெற்ற பள்ளி விராலிமலை விவேக மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News