- வீட்டிலிருந்த ரூ. 31 ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்தது.
- சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள பிரதாபராமபுரம் கிராமத்தில் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடை பெற்று வந்ததுள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கீழையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடை பெற்று வந்தது.
இந்நிலையில் பிரதாபரா மபுரம், பூவைத்தேடி, ராமர்மடம் கிராம மக்கள் நேற்று நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹரிடம் புகார் மனு அளித்தனர்.
இதனை தொடர்ந்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பிரதாபராமபுரம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டு மக்களை சந்தித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது பேசிய பொதுமக்கள் சாராயத்தை ஒழித்தால் நிச்சயம் திருட்டும் குறையும் என கூறினர்.
அப்போது கூடுதலாக தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உள்ளதாகவும் ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் இணைந்து பணியாற்றலாம் எனவும் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பொதுமக்களிடம் தெரிவித்தார். மேலும் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இந்த நிலையில் பூவைத்தேடி கிராமத்தில் வெங்கட்ராமன் என்பவர் வீட்டிலும் திருட்டு சம்பவம் அரங்கேறியிருப்பது தெரியவந்தது.
அவரது வீட்டிலிருந்த 31 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டிருந்தது. இதனையடுத்து பொது மக்கள் நாகை - வேளாங்கண்ணி சாலையில் பூவைதேடி கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனே போராட்டம் கைவிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து திருட்டு சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருட்டு நடந்த பகுதியில் சோதனை செய்தனர். வீட்டில் திருடர்கள் பின்புறம் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் 10 சவரன் தங்க நகை கூஜாவில் இருந்ததை திருடர்கள் கவனிக்காததால் நகைகள் தப்பியது.இது குறித்து கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.