உள்ளூர் செய்திகள்

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைெபற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்ட காட்சி.

தருமபுரியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 380 மனுக்கள் வரப்பெற்றன

Published On 2023-08-22 10:18 GMT   |   Update On 2023-08-22 10:18 GMT
  • உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 380 மனுக்கள் வரப்பெற்றன.
  • மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு கலெக்டர் சாந்தி உத்தரவிட்டு ள்ளார்.

தருமபுரி,

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடை பெற்றது.ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமைகளில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெறப்பட்டு, தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய தீர்வுகள் காணப்பட்டு வருகிறது.

கூட்டத்தில் பொது மக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலை வாய்ப்பு, இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 380 மனுக்கள் வரப்பெற்றன என்று கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொது மக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு கலெக்டர் சாந்தி உத்தரவிட்டு ள்ளார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) நசீர் இக்பால், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறும் பான்மையினர் நல அலுவலர் ராஜசேகரன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கண்ணன் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News