உள்ளூர் செய்திகள்

பணிகள் முடிவடையாமல் காணப்படும் ரெயில்வே கீழ்பாலம்.

ரெயில்வே கீழ்பால பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

Published On 2022-11-11 13:14 IST   |   Update On 2022-11-11 13:14:00 IST
  • பாலம் வேலை நடைபெற்று வருவதால் கோவிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் அவதி.
  • மளிகை பொருள் மற்றும் காய்கறிகள் வாங்க 3 கிலோமீட்டர் சுற்றிவர வேண்டிய நிலை உள்ளது.

பேராவூரணி:

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் இருந்து ஆத்தாளூர் செல்லும் வழியில் உள்ள ஆண்டவன் கோயில் எல்சி 117 ரயில்வே கேட் எடுக்கப்பட்டு, கீழ்மட்ட பாலம் 300 மீட்டர் அளவில் கடந்த ஐந்து மாதங்களாக வேலை நடைபெற்று வருகிறது.

இதனால் ஆத்தாளூர், நாடாகாடு, முனி கோவில் பாலம், பூக்கொல்லை, முடச்சிக்காடு, கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த வழியை பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் இந்த பகுதிகளைச் சேர்ந்த 500 மாணவர்கள் பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

இவர்கள் பள்ளிக்கு வருவதற்கு சுமார் மூன்று கிலோமீட்டர் சுற்றி பேராவூரணி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வர வேண்டிய அவல நிலை உள்ளது.

இவ்வழியே ஆத்தாளுர் வீரமாகாளி அம்மன் கோவில் உள்ளது.

கோயிலுக்கு மாவடுகுறிச்சி, இந்திரா நகர், தென்னங்குடி, கொன்றைக்காடு, களத்தூர் கிராம பொதுமக்கள், பக்தர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.

தற்போது பாலம் வேலை நடைபெற்று வருவதால் கோவிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஆத்தாளூர் கிரா மத்திலிருந்து பேராவூரணி நகர் பகுதியில் மளிகை பொருள் மற்றும் காய்கறிகள் வாங்க 3 கிலோமீட்டர் சுற்றிவர வேண்டிய நிலை உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே உடனடியாக பாலம் கட்டும் பணியை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்படுத்த திறந்து விட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News