சாலை பழுதான நிலைமை குறித்து பொதுமக்கள் புகார்- உடனடியாக சாலையை சீரமைத்த மாவட்ட காவல்துறை
- வாகன ஓட்டிகளின் கோரிக்கை குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் உடனடியாக காவல்துறையினர் மூலம் பழுதான சாலையை சீரமைக்க உத்தரவிட்டார்.
- வாகன ஓட்டிகளின் கோரிக்கையை அறிந்து உடனடியாக சாலையை சீரமைக்க பிறந்த மாவட்ட காவல் துறைக்கு அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளும், மக்களும் நன்றி தெரிவித்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாற்றங்கரை மேம்பாலம் அருகே சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி வாகன விபத்தில் சிக்கி காயம் அடைந்து அவதிப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
மேலும்மாவட்ட நிர்வாகமோ, மாவட்ட காவல் துறையோ, உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட துறையினர் மூலம் சேதமான சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும்கோரிக்கை விடுத்தனர்.
வாகன ஓட்டிகளின் கோரிக்கை குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் உடனடியாக காவல்துறையினர் மூலம் பழுதான சாலையை சீரமைக்க உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து ஜேசிபி உதவியுடன் காவல் துறையினர் விரைந்து வந்து பழுதான சாலையை தற்காலிக சீரமைத்து தந்தனர்.
வாகன ஓட்டிகளின் கோரிக்கையை அறிந்து உடனடியாக சாலையை சீரமைக்க பிறந்த மாவட்ட காவல் துறைக்கு அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளும், மக்களும் நன்றி தெரிவித்தனர்.