உள்ளூர் செய்திகள்

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் மேயர் சரவணன் ஆய்வு செய்த காட்சி. அருகில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ உள்ளார்.

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பயணிகளின் இருக்கைகள் அருகே சுத்திகரிப்பு குடிநீர் வைக்க ஏற்பாடு- ஆய்வு செய்த பின் மேயர் உத்தரவு

Published On 2023-11-06 09:15 GMT   |   Update On 2023-11-06 09:15 GMT
  • பயணிகளுக்கு இடையூறாக இருந்த கடைகளை அப்புறப்படுத்துமாறு மேயர் அறிவுரை வழங்கினார்.
  • பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என மேயர் சரவணன் தெரிவித்தார்.

நெல்லை:

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் மேயர் பி.எம். சரவணன் ஆய்வு செய்தார். அப்போது பிளாட்பாரங்களில் பயணிகளுக்கு இடையூறாக இருந்த கடைகளை அப்புறப்படுத்துமாறு அறிவுரை வழங்கினார்.

மேலும், அருகில் இருந்த கட்டண சுகாதார வளாகங்களை ஆய்வு செய்தார். தொடர்ந்து பஸ் நிலையத்தில் பயணிகளிடம் குறைகளை கேட்டார். பின்னர் பயணிகள் வேண்டுகோளை ஏற்று பயணிகள் அமரும் இருக்கைகள் அருகிலேயே சுத்திகரிப்பு குடிநீரை வைக்க உத்தரவிட்டார்.

மேலும் இனிவரும் காலங்களில் புதிய பஸ் நிலையத்தில் ஆய்வு செய்து பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றார். அப்போது துணை மேயர் கே.ஆர். ராஜு மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர். 

Tags:    

Similar News