உள்ளூர் செய்திகள்

நிழற்குடை பகுதியில் டீக்கடை வைத்து போராட்டம்

Published On 2023-10-02 11:45 IST   |   Update On 2023-10-02 11:45:00 IST
  • பஸ்கள் நின்று செல்லாததால்நிழற்குடை பகுதியில் டீக்கடை வைத்து போராட்டம்
  • விவசாயிகள் சங்கம் சார்பில் டீக்கடை மற்றும் உணவு விடுதிகள் பெட்டிக்கடைகள் அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

முசிறி 

திருச்சி மாவட்டம் முசிறியில் துறையூர் சாலையில் உள்ள பயணியர் நிழற்குடை பகுதியில் பேருந்துகள் நிற்காமல் வணிக வளாகங்கள் உள்ள பகுதியில் பேருந்துகள் நின்று செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.முறையாக பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் பேருந்துகளை நிறுத்தி செல்வதற்கு போக்குவரத்து பணிமனை மற்றும் போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் போன்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் வாழ்வாதார முன்னேற்ற சங்கத்தின் மாநில துணைத்தலைவரும் சமூக ஆர்வலருமான மனோகரன் மாவட்ட ஆட்சியர் மற்றும் முசிறி நகராட்சி ஆணையர் துறை சார்ந்த அலுவலர்களுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார். இந்த மனு மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கலெக்டர் பயணியர் நிழற்குடை பகுதியில் விவசாயிகள் சங்கம் சார்பில் டீக்கடை மற்றும் உணவு விடுதிகள் பெட்டிக்கடைகள் அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News