உள்ளூர் செய்திகள்

பால் விலை, மின் கட்டண உயர்வை கண்டித்து வேப்பனப்பள்ளியில் பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம்

Published On 2022-11-16 15:19 IST   |   Update On 2022-11-16 15:19:00 IST
  • வேப்பனப்பள்ளி உள்பட பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • மேற்கு மாவட்ட பா.ஜனதா பொதுச் செயலாளர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

கிருஷ்ணகிரி,

தமிழக அரசின் பால் விலை உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வைக் கண்டித்து, பா.ஜனதா சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் மண்டல அளவிலான ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி, பர்கூர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, வேப்பனப்பள்ளி உள்பட பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி வடக்கு ஒன்றியத்தில் தி.மு.க. அரசை கண்டித்தும், பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

வேப்பனப்பள்ளி காந்தி சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட பா.ஜனதா பொதுச் செயலாளர் வி.எம். அன்பரசன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஸ்ரீதர் வரவேற்றார். சாந்தி விநாயகர் பேசினார். இதில் மாவட்ட இளைஞர் அணி தலைவர் முரளி, ஒன்றிய இளைஞர் அணி தலைவர் ஜானி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News