உள்ளூர் செய்திகள்

போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கபடி போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு

Published On 2023-09-02 09:52 GMT   |   Update On 2023-09-02 09:52 GMT
  • ஆண்கள் பிரிவில் 20 அணிகளும், பெண்கள் பிரிவில் 8 அணிகளும் பங்கேற்றன.
  • சூரனூர் அரசினர் உயர்நிலைப் பள்ளி அணி 4-ம் இடத்தை பிடித்தது.

மன்னார்குடி:

மன்னார்குடி அடுத்த வடுவூர் விளையாட்டு அகாடமி அரங்கில் மாவட்ட கபடி கழகம், கோவை ஈஷா யோகா மையம் ஆகியவை இணைந்து மாவட்ட அளவிலான கபடி போட்டி நடத்தியது.

இதில் ஆண்கள் பிரிவில் 20 அணிகளும், பெண்கள் பிரிவில் 8 அணிகளும் பங்கேற்றன.

ஆண்கள் பிரிவில் வடுவூர் புதுகை நண்பர்கள் கபடி குழு B அணி முதல் இடத்தையும், வடுவூர் புதுகை நண்பர்கள் A அணி 2-ம் இடத்தையும், வானவில் கபடி குழு பரவாக்கோட்டை அணி 3-ம் இடத்தையும், கட்டக்குடி விளையாட்டு கழக அணி 4-ம் இடத்தையும் பிடித்தது.

இதேபோல், பெண்கள் பிரிவில் கட்டக்குடி விளையாட்டு கழக அணி முதல் இடத்தையும், மன்னார்குடி அரசினர் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி 2-ம் இடத்தையும், கட்டக்குடி அரசினர் உயர்நிலைப்பள்ளி அணி 3-ம் இடத்தையும், சூரனூர் அரசினர் உயர்நிலைப் பள்ளி அணி 4-ம் இடத்தையும் பிடித்தது.

பின்னர், வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

நிகழ்ச்சிக்கு திருவாரூர் மாவட்ட கபடி கழக செயலாளர் ராசராசேந்திரன் தலைமை தாங்கினார்.

கோவை ஈஷா யோகா மைய ஸ்வாமி தவமோளா வெற்றிபெற்ற அணிகளுக்கு கேடயம், பரிசுத்தொகை, சான்றிதழ்கள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர்கள் பொன் கோவிந்தராசு, அசோகன், வடுவூர் ஊராட்சி தலைவர் பாலசுந்தரம், வடுவூர் தென்பாதி ஊராட்சி தலைவர் பாமா, வடுவூர் வடபாதி ஊராட்சி தலைவர் நெடுஞ்செழியன், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் விஜய், வடுவூர் விளையாட்டு அகாடமி செயலாளர் அக்ரி சாமிநாதன், இணைச்செயலாளர்கள் சேகர், வேலுமணி, ரங்கநாதன், ஈஷா மைய பொறுப்பாளர் அசோகன் மற்றும் ராஜேந்திரன் கோவை ஈஷா மைய திவ்யா, பிரியா சஞ்சீவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News