உள்ளூர் செய்திகள்

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு

Published On 2023-02-27 08:13 GMT   |   Update On 2023-02-27 08:13 GMT
  • மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
  • ஊராட்சி ஒன்றியப்பள்ளி தலைமை ஆசிரியை மரகதம் சிறப்புரையாற்றினார்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் ஸ்ரீ தாயுமானவர் வித்யாலயம் உதவி நடுநிலைப்பள்ளியில் சுதந்திர போராட்ட தியாகி குருகுலம் பள்ளி நிறுவனர் சர்தார் வேதரத்னம் பிள்ளையின் 126-வது பிறந்தநாள் விழா திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் சென்ட் உறுப்பினர் ராஜலிங்கம் தலைமையில் நடந்தது.

விழாவில் சர்தார் தேசிய சேவைகள் மற்றும் கல்வி பணிகள் குறித்து கைலவனம் பேட்டை ஊராட்சி ஒன்றியப்பள்ளி தலைமை ஆசிரியை மரகதம் சிறப்புரையாற்றினார்.

விழாவை யொட்டி வேதா ரண்யம் சரகத்தில் உள்ள 17 பள்ளிகளின் மாணவ- மாணவிகளிடையே போட்டிகள் நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்ற 200 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் குருகுலம் கல்வியியல் கல்லூரி நிர்வாகி கேடிலியப்பன், முன்னாள் பேரூராட்சி தலைவர் சங்கர வடிவேல், முன்னாள் ரோட்டரி கிளப் தலைவர் அம்பிகாதாஸ், திருநாவுக்கரசு வார வழிபாட்டு மன்ற ராஜேந்திரன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் சித்திரவேல், வைரக்கண்ணு உள்பட பிரமுகர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

முன்னதாக குருகுலம் நிர்வாக அறங்காவலர் கயிலைமணி வேதரத்னம் அனைவரையும் வரவேற்றார்.

முடிவில் வித்யாலயம் பள்ளி தலைமை ஆசிரியை நந்தினி நன்றி கூறினார்.

Tags:    

Similar News