வெற்றிபெற்ற கிரிக்கெட் அணியினருக்கு பரிசுக்கோப்பை வழங்கப்பட்டது.
விருவீட்டில் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகோப்பை
- போட்டியில் திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அணிகள் விளையாடின. வெற்றி பெற்ற முதல் 4 அணிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- 3-ம் இடம் பிடித்த விருவீடு வசந்த் அணிக்கு கனரா வங்கி மேலாளர் சுழற் கோப்பை வழங்கினார்.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு அருகே உள்ள விருவீட்டில் நேதாஜி மக்கள் அறக்கட்டளை சார்பில் முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி 6 நாட்கள் நடைபெற்றது. போட்டியில் திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அணிகள் விளையாடின. வெற்றி பெற்ற முதல் 4 அணிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
முதலிடம் பிடித்த உசிலம்பட்டி அணிக்கு சிவலிங்கேஸ்வரர் கோவில் நிர்வாக குழு தலைவர் இளையராஜா சுழற்கோப்பையை வழங்கினார். 2-ம் இடம் பிடித்த விருவீடு நேதாஜி அணிக்கு தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் கனிக்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சத்ரியன் கனிக்குமார் ஆகியோர் சுழற் கோப்பை மற்றும் பரிசுத்தொகையை வழங்கினர். 3-ம் இடம் பிடித்த விருவீடு வசந்த் அணிக்கு கனரா வங்கி மேலாளர் சுழற் கோப்பை வழங்கினார்.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக விருவீடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை முன்னாள் கிரிக்கெட் வீரர் சிவக்குமார், கவின் தங்கப்பாண்டி, மனோஜ் குமார், நேதாஜி மக்கள் அறக்கட்டளை நிறுவன இயக்குனர் நேதாஜி சிவா, அருண்பாண்டி, சின்னமாயன், பாண்டி, விஜயகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.