உள்ளூர் செய்திகள்

நாகையில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

Published On 2023-01-29 10:03 GMT   |   Update On 2023-01-29 10:03 GMT
  • 50-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களில் பணியாற்ற ஆர்வத்துடன் விண்ணப்பம்.
  • 439 பேருக்கு உடனடியாக பணி ஆணை வழங்கப்பட்டது.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம், பாப்பாக்கோவில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. வேலை வாய்ப்பு முகாமை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் தொடங்கி வைத்தார்.

மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், எம்.எல்.ஏ.க்கள் ஷாநவாஸ், நாகை மாலி, தமிழக தாட்கோ தலைவர் மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்ற முகாமில் ஆர்வத்துடன் இளைஞர்கள் கலந்துகொண்டனர். முகாமில் நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருந்த இளைஞர்கள் ராயல் என்ஃபீல்டு, டாட்டா, ஆதித்யாபிர்லா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களில் பணியாற்ற ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்.

நாகை மாவட்டத்தில் 3488 நபர்கள், அருகாமையில் உள்ள மாவட்டத்தை சேர்ந்த 186 நபர்கள் என 3674 நபர்கள் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றனர். இதில் 978 நபர்கள் பணிபுரிய தேர்வு செய்யப்பட்டு, அதில் 439 நபர்களுக்கு உடனடியாக பணியானை வழங்கப்பட்டது. தொடர்ந்து ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு சமுதாய முதலீட்டு நிதியில் இருந்து பி.எம்.ஏ.ஒய். திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு 33 நபர்களுக்கு ரூ.14 லட்சத்து 10 ஆயிரம் நிதி உதவியை நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்.

Tags:    

Similar News