உள்ளூர் செய்திகள்

ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் திவ்யா மணிகண்டன், தேர்வான ஒருவருக்கு பணி நியமன ஆணையினை வழங்கிய காட்சி.

ஆலங்குளத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்​ - 125 பேருக்கு பணி நியமன ஆணை

Published On 2022-10-31 14:41 IST   |   Update On 2022-10-31 14:41:00 IST
  • ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
  • முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு, தகுதியான பணியாளர்களை தேர்வு செய்தனர்.

ஆலங்குளம்:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு, ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் திவ்யா மணிகண்டன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் திலகர்ராஜ், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மாவட்ட உதவி திட்ட அலுவலர் முருகன், ஆலங்குளம் வட்டார ஒருங்கிணைப்பாளர் தங்கமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, தங்கள் நிறுவனங்களுக்கு தகுதியான பணியாளர்களை தேர்வு செய்தனர். முகாமில் கலந்துகொண்ட 425 பேரில், தேர்வு செய்யப்பட்ட 125 பேருக்கு பணி நியமன ஆணை உடனடியாக வழங்கப்பட்டது.

Tags:    

Similar News