உள்ளூர் செய்திகள்

தனியாக வரவழைத்து தனியார் நிறுவன மேலாளரை தாக்கி நகை, மோட்டார் சைக்கிள் பறிப்பு

Published On 2023-05-20 16:01 IST   |   Update On 2023-05-20 16:01:00 IST
  • அடையாளம் தெரியாத நபர் சுந்தரராஜிக்கு செல்போன் மூலம் ஆபாச படங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது.
  • சபலம் அடைந்த சுந்தரராஜை போனில் பேசிய நபர் கூடுவாஞ்சேரி சிற்பி நகர் பகுதிக்கு தனியாக வரும்படி அழைத்துள்ளார்.

வண்டலூர்:

சென்னை பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜ் (வயது 36), இவர் கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு தனது வீட்டுக்கு வந்து வழக்கமான பணிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு அடையாளம் தெரியாத நபரிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்று பேசியபோது அடையாளம் தெரியாத நபர் சுந்தரராஜிக்கு செல்போன் மூலம் ஆபாச படங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதில் சபலம் அடைந்த சுந்தரராஜை போனில் பேசிய நபர் கூடுவாஞ்சேரி சிற்பி நகர் பகுதிக்கு தனியாக வரும்படி அழைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து சுந்தரராஜ் மோட்டார் சைக்கிளில் கூடுவாஞ்சேரி சிற்பி நகர் பகுதிக்கு சென்றபோது அப்போது அங்கிருந்த 3 பேர் கொண்ட கும்பல் சுந்தரராஜை கத்தியை காட்டி மிரட்டி அவரை தாக்கி விட்டு அவர் கையில் அணிந்திருந்த 2 தங்க மோதிரம், ஒரு லேப்டாப், ஒரு போன், ஒரு வாட்ச் மற்றும் சுந்தரராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் போன்றவற்றை பறித்து கொண்டு தப்பிச்சென்று விட்டனர்.

இதுகுறித்து சுந்தரராஜ் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சியின் அடிப்படையில் 3 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News