உள்ளூர் செய்திகள்

சர்க்கரை துறை ஆணையர் விஜயராஜ்குமார் மோகனூர் பகுதியில் கரும்பு தோட்டத்தை பார்வையிட்ட போது எடுத்த படம். அருகில் சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனர் மல்லிகா உள்ளார்.

சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் முதன்மை செயலாளர் ஆய்வு

Published On 2023-02-22 09:41 GMT   |   Update On 2023-02-22 09:41 GMT
  • மோகனூரில் செயல்பட்டு வரும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் முதன்மைச் செயலாளரும், சர்க்கரை துறை ஆணையருமான விஜயராஜ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
  • சர்க்கரை ஆலையின் மூலம் செயல்படுத்தப்படும் எரிசாராய ஆலை, விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் இணை மின் உற்பத்தி திட்டம் மற்றும் சர்க்கரை ஆலையில் கரும்பு அறுவை செய்யும் இடம், சர்க்கரை உற்பத்தியாகும் இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் செயல்பட்டு வரும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் முதன்மைச் செயலாளரும், சர்க்கரை துறை ஆணையருமான விஜயராஜ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

மோகனூர் பகுதிகளில் கரும்பு பயிர் செய்துள்ள வயல்கள், கரணை வெட்டப்படும் இடம், சர்க்கரை ஆலையின் மூலம் செயல்படுத்தப்படும் எரிசாராய ஆலை, விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் இணை மின் உற்பத்தி திட்டம் மற்றும் சர்க்கரை ஆலையில் கரும்பு அறுவை செய்யும் இடம், சர்க்கரை உற்பத்தியாகும் இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது எரிசார ஆலையின் செயல்பாடு குறித்தும், விரைவில் தொடங்கப்பட உள்ள இணை மின் உற்பத்தி திட்டத்தின் தற்போதைய செயல்பாட்டின் நிலை குறித்தும் சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனர் மல்லிகா, சர்க்கரைத் துறை ஆணையரிடம் எடுத்துக் கூறினார்.

அதனை தொடர்ந்து சர்க்கரை ஆலைக்கு கரும்பு விநியோகம் செய்யும் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது விவசாயிகளின் கேள்விகளுக்கு ஆணையர் விஜயராஜ்குமார் பதிலளித்தார். ஆய்வின் போது துறை சார்ந்த அலுவலர்கள், அலுவலகப் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News