உள்ளூர் செய்திகள்
நெய்வேலியில் பரபரப்பு- கோவிலுக்குள் பூசாரி தற்கொலை
- நேற்று மாலை கோவிலுக்குள் பூசாரி தூக்கில் பிணமாக தொங்கினார்.
- கோவில் பூசாரி ஆறுமுகம் தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர்:
கடலுார் மாவட்டம், நெய்வேலி, டவுன்ஷிப் வட்டம் 21-ல் உள்ள வாசகர் சாலையை சேர்ந்தவர் ஆறுமுகம், (வயது 45) திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் நெய்வேலி வட்டம் 21ல் உள்ள நாக கன்னியம்மன் கோவிலில் பூசாரியாக இருந்தார்.
நேற்று மாலை 4 மணி அளவில் கோவிலுக்குள் ஆறுமுகம் தூக்கில் பிணமாக தொங்கினார். தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, ஆறுமுகத்தின் உடலை மீட்டு என்.எல்.சி. மருத்துவமனைக்கு அனுப்பினர்.
எனினும் கோவில் பூசாரி ஆறுமுகம் எதற்காக தற்கொலை செய்தார்? யாராவது அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்டனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.