உள்ளூர் செய்திகள்

அசைவ உணவு தயாரிக்கும் உணவகங்கள்-ஓட்டல்களில் ஆய்வு மேற்கொள்ள கலெக்டர் உத்தரவு

Published On 2023-01-25 15:06 IST   |   Update On 2023-01-25 15:06:00 IST
  • மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் கி.சாந்தி தலைமையில் நடைபெற்றது.
  • விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் சாந்தி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தருமபுரி,-

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் கி.சாந்தி தலைமையில் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்களை அதிகளவு சேகரித்து பயோடீசலாக மாற்ற அறிவுறுத்தப்பட்டது. தடைசெய்யப்பட்ட நெகிழிப்பைகள் உபயோகம், பான்மசாலா குட்கா விற்பனை மற்றும் தரமற்ற பொருட்கள் விற்பனை ஆகியவற்றுக்கு உடனடி அபராதம் விதிக்குமாறு அறிவுறுத்தினார்.

தருமபுரி மாவட்டத்தில் அனைத்து ஐஸ் தயாரிக்கும் கம்பெனிகளும் ஆய்வு செய்யப்பட்டு உரிமம் வழங்க அறிவுறுத்தப்பட்டது. மேலும் அசைவ உணவு தயாரிக்கும் அனைத்து உணவகங்கள் மற்றும் ஓட்டல்கள் ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் அயோடின் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் சாந்தி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட நியமன அலுவலர் பானுசுஜாதா, காரிமங்கலம்- பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் கந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News