உள்ளூர் செய்திகள்

பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய இட வசதி இல்லாததால் கர்ப்பிணிகள் அவதி -காத்திருப்பு அறையை விரைவில் கட்ட கோரிக்கை

Published On 2022-06-09 10:27 GMT   |   Update On 2022-06-09 10:27 GMT
  • தினமும் 30-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் பரிசோதனைக்காக வருகின்றனர்.
  • காத்திருப்பு அறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 15 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.

நெல்லை:

பேட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு மகப்பேறு மருத்துவம் மற்றும் பொது மருத்துவம் பார்க்கப்படுகிறது. தினமும் 30-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் பரிசோதனைக்காக வருகின்றனர்.

இவர்கள் உட்காருவதற்காக மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லாத தால் வெயிலில் உட்கார்ந்து இருக்கும் சூழ்நிலை ஏற்படுவதாக அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கர்ப்பிணிகள் மற்றும் பிற நோயாளிகள் உட்காருவதற்காக ரூ.20 லட்சம் செலவில் காத்திருப்பு அறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 15 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.

தொடர்ந்து அஸ்திவாரம் போடுவதற்காக பெரிய குழிகள் தோண்டப்பட்டன.ஆனால் குழிகள் தோண்டப்பட்டு அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. பணிகள் எதுவும் நடைபெறவில்லை.

இதனால் கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகள் மருத்துவ மனைக்கு பரிசோ தனைக்காக மருத்துவரை பார்க்க செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக பணிகளை தொடங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News