வேப்பனப்பள்ளியில் ரூ. 41 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு கட்டிடப் பணிகளுக்கு பூமி பூஜையை ஓசூர் பிரகாஷ் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த காட்சி.
ரூ.41 லட்சம் பணிகளுக்கு பிரகாஷ் எம்.எல்.ஏ. பூமி பூஜை
- 41 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
- புதிய கதிரடிக்கும் களத்திற்கு பிரகாஷ் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.
வேப்பனபள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளில் கழிவு நீர் கால்வாய் சாலை வசதிகள், பேருந்து நிழல் கூடம், சிமெண்ட சாலை அமைத்தல், மற்றும் பள்ளி சுற்றுச்சுவர் அமைக்க அடிக்கல் என மொத்தம் சுமார் 41 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்த அடிக்கல் நாட்டு விழாவில் வேப்பனப்பள்ளி தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன் தலைமையில், ஓசூர் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளருமான பிரகாஷ் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பச்சைமலை முருகன் கோவில் அருகில் ரூ. 3.5 லட்சத்தில் புதிய பேருந்து நிழல் கூடம் அமைக்க அடிக்கல் நாட்டினார்.
பின்னர் நாச்சிகுப்பம் கிராமத்தில் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் புதிய கதிரடிக்கும் களத்திற்கு பிரகாஷ் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார். பின்னர் நேரலகிரி கிராமத்தின் அருகே உள்ள கே.ஜி.எப். ஜங்ஷனில் ரூபாய் 3.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிழல் கூடம் அமைக்க பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.