உள்ளூர் செய்திகள்
புன்னைநல்லூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
- துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சாலியமங்கலம் உதவி செயற்பொறியாளர் நல்லையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது .
எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில், ஞானம்நகர், பைபாஸ், எடவாக்குடி, களக்குடி, நெட்டாநல்லூர், காந்தாவனம், சித்தர்காடு, ஆலங்குடி,நெல்லிதோப்பு, கடகடப்பை, தளவாபா ளையம், குளிச்சப்பட்டு, அன்னை இந்திராநகர், பனங்காடு, கீழவஸ்தாசாவடி, சூரக்கோட்டை, அம்மாகுளம், ஆனந்த்நகர், பரிசுத்தம் ஜேம்ஸ் நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது