உள்ளூர் செய்திகள்
குன்னூர், அருவங்காடு பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
- ஜெகதளா துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- இளித்தொரை, ஓசஹட்டி, உபதலை, மவுண்ட் பிளசன்ட் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஜெகதளா துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அருவங்காடு, குன்னூர், பர்லியார், வண்டிசோலை, சின்காரா, வெலிங்டன், புரூக்போஸ்ட், ஆடர்லி, பெட்போர்டு, ஓட்டுப்பட்டரை, கரன்சி, பேரட்டி, சிம்ஸ்பார்க், இளித்தொரை, ஓசஹட்டி, உபதலை, எடப்பள்ளி, மவுண்ட் பிளசன்ட் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை நீலகிரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வாசுநாயர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.