உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கான அஞ்சல்துறை சேவைகள் குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட்ட காட்சி


அம்பையில் அஞ்சல் வாரவிழா

Published On 2022-10-13 09:21 GMT   |   Update On 2022-10-13 09:21 GMT
  • ஆண்டுதோறும் அக்டோபர் 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை அஞ்சல் வார விழா கொண்டாடப்படுகிறது.
  • அஞ்சலகம் மூலம் அனுப்பப்படும் அஞ்சல்கள் பிரிக்கப்படும் முறை குறித்து செயல்விளக்கம் மூலம் விளக்கப்பட்டது.

கல்லிடைக்குறிச்சி:

ஆண்டுதோறும் அக்டோபர் 9-ந்தேதி முதல்13-ந்தேதி வரை அஞ்சல் வார விழா கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அம்பாசமுத்திரம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அஞ்சல்துறை சேவைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இதில் அம்பாசமுத்திரம் அஞ்சல் உபகோட்ட உதவி கண்காணிப்பாளர் பாலாஜி மாணவர்களுக்கு அஞ்சல்துறை சார்பில் வழங்கப்படும் பல்வேறு சேவைகள் குறித்து எடுத்துரைத்தார்.

மேலும் அஞ்சலகம் மூலம் அனுப்பப்படும் அஞ்சல்கள் பிரிக்கப்படும் முறை குறித்து செயல்விளக்கம் மூலம் விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அஞ்சல் அலுவலர்கள், பணியாளர்கள், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




Tags:    

Similar News